search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்டெல் பயனர்களை குஷிப்படுத்த சூப்பர் சலுகை அறிவிப்பு
    X

    ஏர்டெல் பயனர்களை குஷிப்படுத்த சூப்பர் சலுகை அறிவிப்பு

    ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வதிமாக புதிய சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. #airtelthanks



    பாரதி ஏர்டெல் நிறுவனம் #airtelthanks மூலம் தனது பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய திட்டத்தின் மூலம் மாதம் ரூ.100-க்கும் அதிக கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும் என பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. அந்த வகையில் யனர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. விரைவில் #airtelthanks சலுகை வி-ஃபைபர் ஹோம் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என ஏர்டெல் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏர்டெல் நிறுவனம் பிளிப்கார்ட் தளத்துடன் இணைந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ஜி.பி. போனஸ் டேட்டா உள்ளிட்டவற்றை பிளிப்கார்ட் பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற சலுகைகளுடன், ஏர்டெல் நிறுவன இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட திட்டங்களை தேர்வு செய்வோருக்கு ரூ.1500 மதிப்புள்ள மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

    நெட்ஃபிளிக்ஸ் சந்தாவினை ஏர்டெல் டி.வி. ஆப் அல்லது மைஏர்டெல் ஆப் மூலமாகவும் பெற முடியும். இத்துடன் ஏர்டெல் நிறுவனம் ஜீ5 தரவுகளை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
    Next Story
    ×