search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெபாற்கிழி"

    • ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு பூஜைகள் செய்தனர்.
    • குருபூஜை விழாவின்ேபாது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலை அடுத்த திம்மக்குடியில் வரதராஜன் சகோதரர்கள் 1500 கிலோ எடையில் 23 அடி உயரமும், 17 அடி அகலமும் கொண்ட ஐம்பொன்னாலான உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடித்துள்ளனர்.

    இந்த ஐம்பொன் சிலையை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பார்வையிட்டு பூஜைகள் செய்து வணங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்:-

    உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையை வடித்த திம்மக்குடி வரதராஜன் சகோதரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் மூலம் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் 25 இடங்களில் நடைபெறும்.

    அவற்றில் திருமுறை பயிற்சி மையங்கள் 112 செயல்படுவதாகவும் அவற்றில் பயின்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு–தோறும் திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெறும் குருபூஜை விழாவின் போது விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×