search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவாய் தீவு"

    • விபத்திற்குள்ளான விமானத்தில் 9 பேர் பயணம் செய்தனர்
    • இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி மதிப்புடையது

    மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவுகள் நிறைந்த மாநிலம், ஹவாய். இதன் தலைநகரம் ஹோனோலூலு.

    இங்குள்ள ஒவாஹு (Oahu) தீவுக்கு அருகே கெனோஹே (Kaneohe Bay) கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் விமான படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்திற்கு வாஷிங்டன் மாநில விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ (Boeing Poseidon 8-A) ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று சென்றது.

    விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது அது எதிர்பாராதவிதமாக ஓடுகளத்தை தாண்டி வேகமாக சென்று, பிறகு கடல்நீரில் இறங்கியது.


    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினர்.

    கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுதளம் விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் விதமாக கடல் நீரில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ராணுவ உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி ($275 மில்லியன்) மதிப்புடையது.


    • மவுயி தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை தங்க வைக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    மவுயி தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தீவுக்கு சுற்றுலா வந்த 2 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை தங்க வைக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிக்கு உதவ ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு உள்ளார்.

    ×