search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்"

    • பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
    • திருக்கோவில் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்.

    காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ள ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு

    பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    திருமண வரம் வேண்டி திருக்கோவிலில் செவ்வாய், சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன்

    சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருக்கோவிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின்

    மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு

    அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும்.

    திருக்கோவிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    மேலும் ஆலயத்தில் செல்லியம்மன், மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன.

    புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் இத் திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருக்கோவில் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    காஞ்சீபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் செவிலிமேடு வழியாக

    இயக்கப்படுவதால் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சிரமமின்றி இக் கோவிலுக்கு சென்று வரலாம்.

    ×