search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்தூபி"

    • குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன
    • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி :

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.

    குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்ட வத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலி யான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.

    சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப் பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டும் இன்று (26-ந் தேதி) அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.

    பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தை கள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்ப லியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர்.

    மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தின் அருகில் உள்ள நினைவு ஸ்தூபியில் இன்று இரவு 7 மணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக ஆலயத்தில் திருப்பலியும் நடக்கிறது.

    • கலெக்டர் அலுவலக சாலை பழைய ரவுண்டானா அகற்றும் பணி தீவிரம்
    • ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூபியை மாற்றுவதற்கான பணியும் தீவிரம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏட்டதையடுத்து சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது சாலை விரிவாக்க பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முதல் டெரிக் ஜங்சன் வரை இருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து கலெக்டர் அலுவலக ரவுண்டானாவை புதுப்பித்து அந்த பகுதியில் உள்ள கழிவுநீரோடை களை சீரமைக்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்கான டெண்டரை நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் எடுத்திருந்தனர். டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாமல் இரு ந்தது. அந்த பகுதியில் உள்ள மின் இணைப்புகள் மற்றும் கேபிள் ஒயர்கள் மாற்றப்படாமல் இருந்த தால் பணிகள் தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் மேற்கொண்ட நடவடி க்கையின் காரணமாக கலெக்டர் அலுவலக சுற்று சுவர் இடித்து உள்புறமாக கட்டப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பமும் மாற்றப்பட்டது.

    ஆனால் தொலைபேசி இணைப்புக்கான கேபிள்கள் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை ரவுண்டானா மற்றும் கழிவுநீர் ஓடை அமைப்ப தற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது.

    அப்போது அந்த பகுதியில் கிடந்த தொலைபேசி கேபிள் வயர்கள் சேதமடைந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் இன்டர்நெட் சேவை பாதிக்க ப்பட்டது. இதையடுத்து தொலைதொடப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அதை சரி செய்வதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பழைய ரவுண்டானாவை அகற்று வதற்கான பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகி றது. ரவுண்டானாவின் தடுப்பு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. ரவுண்டானாவில் உள்ள பொன்விழா ஆண்டு ஸ்தூ பியை மாற்றுவதற்கான பணியையும் மேற்கொண்டு உள்ளனர்.

    இன்று இரவு ரவுண்டா னாவில் உள்ள ஸ்தூபியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கழிவு நீர் ஓடை அமைப்பதற்காக அந்த பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதனை சமாளிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள், தொலைத் தொடர்பு ஊழியர்களும் இந்த பணி முடிவடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×