search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிஸ் நகரம்"

    ஐரோப்பிய நாடான இத்தாலியை கடுமையான புயல் தாக்கியது. புயல் காரணமாக வெனிஸில் பெய்த பலத்த மழையால் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. #ItalyStorm
    வெனிஸ்:

    ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற்று வீசியது. கடும் மழையும் கொட்டியது.

    காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

    சவோனோ என்ற இடத்தில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் இறந்தனர். புயல் மழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர்.

    புயல் காரணமாக வெனிஸ் நகரில் பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 156 செ.மீட்டர் (61 இஞ்ச்) உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கி இருக்கிறது.

    இதே போன்று வெனிஸ் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனவே மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர். குழந்தைகள்மற்றும் பொருட்களை தோளில் சுமந்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.

    வெனிஸ் நகரில் தற்போது வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1966-ம் ஆண்டு பெய்த மழையில் 150 செ.மீ. அளவு தண்ணீர் தேங்கியது. தற்போது 194 செ.மீட்டர் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. #ItalyStorm
    ×