search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வசதி"

    • வீட்டு வசதி வாரிய மனைநிலங்கள் விற்பனையில் புதிய நடைமுறையை கைவிட வேண்டும்.
    • சாமானியர்கள், நடுத்தர வகுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனை நிலங்களை முதல் விற்பனையின்போது குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கமான நடைமுறை.

    இந்த நடைமுறையின் போது சதவீத அடிப்படை யில் ஆதிதிராவிடர்களுக்கு 18, பழங்குடியினருக்கு 1, அரசு ஊழியர்களுக்கு 18, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8, ராணுவத்தினருக்கு 7, சலவையாளர்கள் மற்றும் மருத்துவ சமுதாயத்தினருக்கு 4, பத்திரிகையாளர்களுக்கு 3, மொழிப்போர் தியாகிகளுக்கு 1, வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு 38 என்ற அடிப்படையில் மனை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்போது வீட்டு வசதி வாரியம் இந்த நடை முறையை கைவிட்டு மனைநிலங்கள் முதல் விற்பனையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் மனை நிலங்களை விற்பனை செய்யும் நடை முறையால் ஒதுக்கீட்டு முறையில் தேர்வு செய்யப் படாமல் சாமானிய, நடுத்தர மக்களுக்கும் மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே மனை நிலங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

    இதுவரை வீட்டுவசதி வாரிய மனை நிலங்களுக்கு சந்தை விலையை விட 20 சதவீதம் விலை குறை வாகவே நிர்ணயம் செய்து வந்தது. ஆனால் தற்போது சந்தை விலையை கணக்கிட்டு அதன் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழக அரசு புதிய நடைமுறையான முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் விற்பனை செய்வதை கைவிட்டு பழைய ஒதுக்கீட்டு நடை முறையை பின்பற்றுவதோடு 2-வது விற்பனையில் வேண்டுமானால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    ×