search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ கால்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எக்ஸ் வலைதளத்தில் அழைப்புகளை மேற்கொள்ளும் அம்சம் பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
    • எக்ஸ் வலைதளத்தை எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்ற எலான் மஸ்க் விருப்பம்.

    எக்ஸ் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவலை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. வீடியோ கால் அம்சம் பற்றிய தகவலை லிண்டா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்நிறுவன வலைதளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் யார் யார் தனக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதை தேர்வு செய்வதற்கான வசதியும் பயனருக்கு வழங்கப்படுகிறது. இதில் அட்ரஸ் புக்கில் இருப்பவர்கள், யார்யார் ஃபாளோ செய்கிறார்கள் மற்றும் அனைவரும் என மூன்று நிலைகளில் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

    ஆடியோ, வீடியோ அழைப்புகளை மேற்கொள்வது எப்படி?

    அழைப்புகளுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய எக்ஸ் செயலியின் செட்டிங்ஸ் -- பிரைவசி & சேஃப்டி -- டைரக்ட் மெசேஜஸ் -- எனேபில் ஆடியோ & வீடியோ காலிங் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு டைரக்ட் மெசேஜ் ஆப்ஷனில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஐகான் தெரியும். அதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ளலாம்.

    • டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர்.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரேலில் நடந்துவரும் போர், அங்கு மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து பதிலுக்கு பதிலாக எதிர் தாக்குதல் நடத்தியபடியே இருக்கின்றனர்.

    இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இஸ்ரேலில் நடந்துவரும் இந்த போரில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் யாரும் பலியாகியதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

    இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சு ஒருவர், ராக்கெட் தாக்குதலில் படுகாயமடைந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் ஸ்ரீகண்டாபுரத்தை சேர்ந்த வர் ஆனந்த். இவரது மனைவி ஷீஜா, இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் என்ற பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த இடம் காசா பகுதியின் எல்லையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்நிலையில் ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷீஜா படுகாயமடைந்தார். அவர் முதலில் பார்சிலாய் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் ட்டார்.

    பின்பு டெல்அவில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கணவருடன் செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தான், ராக்கெட் தாக்குதலில் ஷீஜா சிக்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இஸ்ரேலில் போர் நடப்பதையறிந்த ஷீஜாவின் கணவர் ஆனந்த், அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசி பத்திரமாக இருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தான், ஷீஜா இருந்த பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கிறது.

    அதில் ஷீஜா சிக்கிக் கொண்டதால், அவரது செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பதறிப்போன் ஆனந்த், தனது மனைவியை மீண்டும் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது செல்போனைதொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதனால் தனது மனைவிக்கு என்ன ஆனது? என்பது தெரியாமல் ஆனந்த் மற்றும் ஷீஜாவின் குடும்பத்தினர் தவித்தபடி இருந்தனர். இந்நிலையில் ராக்கெட் தாக்குதலில் ஷீஜா காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் தகவலை, அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலில் இருக்கும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷீஜாவின் குடும்பத்தினர் கதறினர். ஷீஜாவின் நிலை நன்றாக இருப்பதாக குடும்பத்தினரிடம் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷீஜாவுடன் வீடியோ காலில் பேச வைத்தனர்.

    ஷீஜாவுடன் அவரது தாய் சரோஜினி, சகோதரி ஷஜி ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடியே பேசினர். தனது மகளின் நிலையை கண்டு அவர்கள் வேதனையடைந்தனர். 

    • லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார்.
    • X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே இதனை டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார்.

    X (முன்பு டுவிட்டர்) தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவ்வாறு செய்வதில் இருந்து தற்போதைக்கு எலான் மஸ்க் பிரேக் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.

    அந்த வகையில், X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக டுவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட இருக்கிறது.

     

    சமீபத்திய பேட்டி ஒன்றில் X தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார். "நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள், அவர்கள் தற்போது இதில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவை பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும்," என்று யாக்கரினோ தெரிவித்தார்.

    இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார். இதில் X யு.ஐ.-இல் வீடியோ காலிங் செய்வதற்கான படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் யு.ஐ. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காலங்காலமாக இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. X தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.

    தற்போது X தளத்தில் ஆடியோ காலிங் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது. வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அம்சம் பற்றி X சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.

    • சுகந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சுகந்தி பலமுறை தொடர்பு கொண்டும் காதலன் விஷ்ணு அவரது அழைப்பை எடுக்கவில்லை.

    போரூர்:

    சென்னை, தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தவர் சுகந்தி (வயது25).

    இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். கடந்த 2017-ம்ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது சகோதரர் சுப்புராயனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு வந்த சுகந்தி திடீரென சமையலறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து சுகந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் காதலனுடன் சுகந்தி வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட சுகந்தி ஏற்கனவே திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றும் போது உடன் பணிபுரிந்து வந்த போலீஸ் காரர் விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த விஷ்ணு தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு சுகந்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவிநாசி போலீஸ் நிலையத்தில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வரும் விஷ்ணுவுக்கும், சுகந்திக்கும் இடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதே போல நேற்றும் அவர்கள் வீடியோ காலில் பேசிக் கொண்டு இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து விஷ்ணு இணைப்பை துண்டித்துவிட்டதாக தெரிகிறது. சுகந்தி பலமுறை தொடர்பு கொண்டும் காதலன் விஷ்ணு அவரது அழைப்பை எடுக்கவில்லை.

    இதனால் மன வேதனை அடைந்த சுகந்தி விஷ்ணுவின் நண்பரான மற்றொரு போலீஸ்காரர் ஒருவரை தொடர்பு கொண்டு "நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறி விட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    சுகந்தி மீது ஏற்கனவே உயர் அதிகாரிகள் மூலம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து சென்னைக்கு இட மாற்றம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலன் விஷ்ணுவுடன் செல்போனில் பேசியபோது என்ன பிரச்சினை என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சுகந்தியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக சுகந்தியின் காதலனான போலீஸ்காரர் விஷ்ணு மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த கோயம்பேடு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன் பின்னரே சுகந்தியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.

    • சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    • மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.

    ஐதராபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கிளாஸனின் அதிரடியான சதம் காரணமாக 186 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலியின் சதம் காரணமாக 19.2 ஓவர்களில் வெற்றியை பதிவு செய்தது. சதம் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தனது வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மனைவியே முக்கியக் காரணம் என்று விராட் கோலி கூறுவார்.

    அந்த வகையில் மிகமுக்கியமான சதத்தை விளாசிய பின் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவிடம் வீடியோ காலில் பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.
    • செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    பீஜீங்:

    சீனாவின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

    அந்த வகையில் இப்போது சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியும்.

    இதற்காக செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த ஆப் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் காதலி, அல்லது காதலனை தொடர்பு கொள்ள வேண்டும்.

    அவரும் இணைப்பில் வந்ததும் இருவரும் நிஜத்தில் முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுத்து கொள்ளலாம்.

    இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரம் இதற்கு இளம்ஜோடிகள் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

    • திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர்.
    • பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). ஆர்.கே.நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ .படித்து வருகிறார்.

    இவருக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கல்லூரி மாணவியை வீடியோ கால் மூலம் மாணவன் பரத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×