search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கோரிக்கை"

    • ஏரிகள் வறண்டு உள்ளதால் ஆடு, மாடுகளை மேய்க்கும் பகுதிகளாக மாறி வருகின்றன.
    • கரும்பு, வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்ட பயிர்களும் கம்பு, சோளம், அவரை, துவரை போன்ற பயிர்களும் காய்ந்து கிடக்கின்றன.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஓடும்காவிரி ஆற்றால் எந்த ஒரு பயனுமடையாத தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டு உள்ளதால் ஆடு, மாடுகளை மேய்க்கும் பகுதிகளாக மாறி வருகின்றன.

    தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, கரும்பு, வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்ட பயிர்களும் கம்பு, சோளம், அவரை, துவரை போன்ற பயிர்களும் காய்ந்து கிடக்கின்றன.

    மாவட்டத்தின் குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து மோட்டார்கள் மூலம் பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது வரும் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகளில் நிரப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு குறையும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற பொருளுக்கு ஏற்றவாறு பெரும்பாலான பொதுப்பணித்துறை ஏரிகள் வறண்டே காணப்படுகிறது. தமிழக அரசு இத்திட்டத்தை பரிசீலனை செய்து உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முல்லை பெரியாறு அணையில் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
    • முதல்வருக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    பெரியாறு அணையில் காலியாக உள்ள பொறி யாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என முதல்வருக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியாறு அணையில் உள்ள தமிழக பொது ப்பணித்துறை அலுவலக த்தில் ஒரு செயற்பொறி யாளர், ஒரு உதவி செயற்பொறியாளர், 4 உதவிப்பொறியாளர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு ஓட்டுநர், 12 தற்காலிக பணியாளர்கள் பணியாள ர்கள் பணியில் உள்ளனர்.

    கடந்த மாதம் 3 உதவிப்பொறி யாளர்கள் இடமாறுதல் பெற்றுச்சென்ற னர். அந்த காலிபணியிடம் இன்னும் நிரப்பப்பட வில்லை. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், அணைப்பகுதியில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் 143 அடியை தொடுவதற்கான வாய்ப்பு கள் உள்ள நிலையில் அணை குறித்து வீண் விவாதங்களும், சர்ச்சை களும் கேரள மாநிலத்தில் தொடங்கி விட்டது. நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் பெரியாறு அணையில் தங்கி வேலை செய்யும் தமிழக ஊழிய ர்களின் பற்றாக்குறையால் அவர்களுக்கு கேரள அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

    4 உதவிப்பொறியாளர்கள் தங்கி பணி செய்த இடத்தில், தற்போது ஒருவர் மட்டுமே பணி செய்து வருகிறார்.

    2 பேர் பணி மாறுதலாகி சென்று விட்ட நிலையில உடனடியாக மேற்கண்ட பணியிடங்ளை போர்க்கால அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பணியாளர்கள் 9 பேர் அணையிலும், தேக்கடி அலுவலக பணிக்கு 3 பேர் என இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த வேண்டும். அணையில் தங்கி பணி செய்ய உதவி பொறியாளர் ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த எண்ணி க்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்து ள்ளனர்.

    ×