search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை சரிவால் விவசாயிகள் கவலை"

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி, சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இங்கு விளையும் தக்காளிகளை அய்யலூரில் உள்ள தனி தக்காளி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த வருடம் தக்காளி வரத்து குறைந்ததால் விலை ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வில்லை.

    தற்போது ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் பகுதியில் ஆந்திரா தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.60 முதல் ரூ.80 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ. 7 வரை விற்பனையாகியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    நடவு பணி, பராமரிப்பு, பறிப்பு கூலி, ேபாக்கு வரத்து செலவு என அதிக அளவில் பணம் செலவு செய்த நிலையில் விலை குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், விலை அதிகரித்தபோதும் எங்களுக்கு போதுமான லாபம் கிடைக்கவில்லை. தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே வேளாண் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

    மேலும் விலை குறைவான நேரங்களில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும். சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    மேலும் நஷ்டம் அடைந்த எங்களுக்கு அரசு கருணை உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர்.

    ×