search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை அமோகம்"

    • மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • 10 நாட்களே இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள் வார கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கி ழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வரு கிறது. இந்த ஜவுளி சந்தை உலகப் புகழ்பெற்றது.

    இதில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    நேற்று மாலை முதல் வழக்கம் போல் ஜவுளி வார சந்தை கூடியது. சென்ட்ரல் தியேட்டர் அருகே உள்ள வளாகத்திலும் வாரச்சந்தை கூடியது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். கேரளாவில் இருந்து குறைந்த அளவிலும் , தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரி கள் வந்திருந்தனர்.

    தற்போது கோடை விடுமுறை முடிய இன்னும் 10 நாட்களே இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது. கடந்த வாரத்தி லிருந்து பள்ளி சீருடையை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதே போல் இந்த வாரமும் பள்ளி சீருடை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது. வெளி மாநில வியாபாரிகள் பள்ளி சீருடைகளை மொத்த மாக வாங்கி சென்றனர்.

    இதனால் இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. இதைப்போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று சில்லரை விற்பனையும் 35 சதவீதம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படு த்தாமல் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. 

    • தற்பொழுது கோடை தொடங்கியதால் பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
    • ஒரு கிலோ வியாபாரிகளுக்கு 25 ரூபாயும் நுகர்வோருக்கு கிலோ 30 ரூபாய் என கொடுக்கப்படுகிறது.

    தருமபுரி,

    தமிழகத்தில் கோடை துவங்கியதுமே முக்கனிகளின் வரத்து அதிகரிக்கும். அதிலும் பலாப்பழத்திற்கு என தனி மவுஸ் உண்டு.

    தருமபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, வத்தல்மலை, சித்தேரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மாம்பழத்திற்கு அடுத்ததாக பலாப்பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது.

    இந்த மலைப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்யப்படுிறது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பலாப்பழத் தேவைகளை பூர்த்தி செய்ய தற்பொழுது அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது.

    கொல்லிமலை, ஏற்காடு, ஏலகிரி, பண்ருட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பலாப்பழ விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

    தற்பொழுது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இந்த பழத்திற்கு அதிக சுவை உள்ளதால் வியாபாரிகள் அதிகளவு அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இதுகுறித்து மொத்த வியாபாரி முத்துராஜ் கூறும்போது நான் 30 வருடங்களாக பலாப்பழம் மொத்த வியாபாரம் செய்து வருகிறேன்.

    தருமபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, வத்தல்மலை, சித்தேரி, உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் உள்ளது. அங்கு விளையும் பலாப்பழங்கள் அந்தந்த பகுதியிலேயே விற்பனை செய்யப்படுவதால் மாவட்டத்தில் பலாப்பழம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலும் தருமபுரியில் பண்ருட்டி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விலையும் பலாப்பழங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் பண்ருட்டி பலாப்பழத்திற்கென தனி மவுசு உண்டு. அங்கு விளையும் பழங்கள் ஒரு பழம் ஐந்து கிலோ முதல் 50 கிலோ எடை வரை விளையும் பலாப்பழத்தின் சோலைகள் பெரிதாகவும் சுவை மிகுந்ததாகவும் உள்ளது.

    தற்பொழுது கோடை தொடங்கியதால் பண்ருட்டியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. அங்கு விளையும் பலாப்பழங்களை லாரிகளில் ஏற்றி வந்து தருமபுரி, காரிமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, கம்பைநல்லூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகிறோம்.

    ஒரு கிலோ வியாபாரிகளுக்கு 25 ரூபாயும் நுகர்வோருக்கு கிலோ 30 ரூபாய் என கொடுக்கப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் பலாப்பழம் விற்பனை அமோகமாக சூடு பிடித்து உள்ளது.

    இது குறித்து சித்தா மருத்துவர்கள் கூறும்போது பலாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பழம் இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

    நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது என்று தெரிவிக்கின்றனர்.

    மேலும் முக்கனிகளில் பலாப்பழமும் சிறந்த கனி என்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • தருமபுரியில் 100.4 டிகிரி வெப்பம் வாட்டி ெபாதுமக்களை வதைக்கிறது.
    • வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர் ,நுங்கு ,தர்பூசணி சாப்பிட்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரியை கடந்து 100.4 டிகிரி வெப்பம் வாட்டி வதைப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சோர்ந்து போகும் நிலை உள்ளது. அதனால் பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்டவைகளை தேடிச்சென்று வாங்கு கின்றனர்.

    கோடைகாலத்தில் இளநீர் குடிப்பதால் உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்து வந்தால் மேற்கண்ட பல நன்மைகள் கிடைக்கிறது.

    அதேபோல் நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு மருத்துவ பயன்கள் கிடைக்கிறது. நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, கோடை காலத்தில் வரும் அம்மை மற்றும் வைரல் ஜூரம் தாக்காமல் பாதுகாக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடையும். மேலும், நுங்கிலுள்ள தண்ணீரை, உடலில் தடவினால் வியர்குரு தாக்கம் இருக்காது.

    மேலும் உடல் நலத்திற்கு அதிகளவில் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. இதில், ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை தனிக்கக்கூடியது. தர்பூசணியில் இயற்கையாகவே இரும்பு சத்து நிறைந்துள்ளது. தினம்தோறும் ஒரு துண்டு தர்பூசணி சாப்பிட்டு வந்தால் நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர் ,நுங்கு ,தர்பூசணி, உள்ளிட்டவைகளை தேடி சென்று வாங்கி உண்பதால் அமோக விற்பனை உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • இதனை பொது மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
    • சூளகிரி வட்டாரத்தில் மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருகை தந்து சாலை ஒரம் முகாமிட்டுள்ளனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சூளகிரி, பேரிகை, அத்திமுகம், காமன்தொட்டி மற்றும் பல பகுதிகளுக்கு வருகை தந்து சாலை ஒரம் முகாமிட்டுள்ளனர்.

    இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரங்களில் தங்கி இரும்பு சாமான்கள், விவசாயி களுக்கு தேவையான அரிவால், கத்தி, உழி, சுத்தி ஆகிய பொருட்களை விற்பனை செய்து வருகி ன்றனர். இதனை பொது மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    • விவசாயிகள் கூறிய விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
    • உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யாவை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் பெரும்பாலும் ஏக்கர் கணக்கில் நிலத்தில் கொய்யா அதிக அளவு பராமரித்து வருகின்றனர்.

    சொட்டு நீர் பாசனத்திலும், கிணறு, ஆற்று நீர் பாசனத்திலும் கொய்யா செடிக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். இதனால் குறைந்த அளவில் முதலீடு செய்ததால் அதிக அளவு லாபம் கிடைக்கிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் ஏரி, குளங்கள் நிரம்பின. கிணற்றிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

    பூச்சி தாக்குதல் குறைவால் கொய்யா பழம் நல்ல விளைச்சல் காணப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. வியாபாரிகள் அதிகம் பேர் நேரடியாக தோட்டத்திற்கே நேரடியாக வந்து கொய்யா பழங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் இடையில் இடைதரகர்கள் இல்லை. விவசாயிகள் கூறிய விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

    தருமபுரி நகர் பகுதியில் இருந்து வியாபாரிகள் கொய்யா பழங்களை தோட்டத்திற்கே சென்று வாங்கி கொண்டு தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இதனால் தள்ளுவண்டி கடையில் ஒரு கிலோ கொய்யா பழம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொய்யா பழமும் தரமானதாகவும், சுவையாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கொய்யா மிகவும் ஏற்றது. கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

    கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.

    பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

    இரவு நேரங்களில் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரங்களில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றனர்.

    • நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இழப்பை தற்போது ஈடு செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பாகலூர், பேரிகை,மற்றும் அகலக்கோட்டை, பாலதோட்டனபள்ளி,, மரகததொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    இங்கு ரோஜா, நிராபல், சென்ட்ரோஸ், கில்லி எல்லோ, கிள்ளி ஆரஞ்சு, மேங்கோ எல்லோ, மூக்குத்தி ரோஸ், தாஜ்மஹால், நோப்ளஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்செடி நாற்றுகள், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு, மலர் செடி நாற்று ஏற்றுமதியில் நல்ல லாபம் பெற்று வந்த உற்பத்தியாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

    ரோனா ஊரடங்குக்கு பின்னர், மலர் செடிகள் விற்பனை குறைந்து விவசாயிகள் கடும் நஷ்டங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், இந்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்காக மலர் செடி நாற்றுகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

    புத்தாண்டு பிறப்பு, பொங்கல், காதலர் தினம் ஆகிய விழாக்கள் அடுத்தடுத்து கொண்டா டப்படவுள்ளதால் இந்த பண்டிகைகளுக்காக வியாபாரிகள், மலர்ச்செடி நாற்றுகளை தங்கள் பகுதிகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். இதனால் அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நர்சரி தோட்டங்களில் மலர் செடி நாற்றுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

    இதனால், நர்சரி தொழிலில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும், அண்டை மாநிலமான கேரளாவில், மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதால் கேரள வியாபாரிகள் நாள்தோறும் அகலக்கோட்டை கிராம பகுதிகளுக்கு வந்து அதிகளவில் மலர் செடி நாற்றுகளை கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    இது தவிர காதலர் தின கொண்டாட்டத்தில் காதலர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள மலர்களை வழங்குவதற்கு பதிலாக, மலர் செடிகளை வழங்கி வருகின்றனர். இதனால் மலர் செடிகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. பண்டிகை கொண்டாட்டங்களுக்காக அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மலர் செடி நாற்றுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இழப்பை தற்போது ஈடு செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான்.
    • இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது.

    ஈரோடு:

    தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான்.

    தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதன ங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சில நேரங்களில் மார்ச் மாதம் வரை பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது.

    ஈரோடு மாநகரில் பஸ்நிலையம் பகுதி, வ.உ.சி. மார்க்கெட் பகுதி, கடை வீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை ஏராளமான விவசாயிகள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 10 கிழங்குகள் உள்ள ஒரு கட்டு ரூ.50 முதல் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சி க்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

    பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

    பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கி ழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

    வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

    ×