search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுவிக்கப்படும்"

    • மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
    • இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிலம் உள்ள அனைத்து விவசாயிக ளுக்கும் விவசாய நிதி தேவைக்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு வரும் 31-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரி பார்ப்பு பணிக்கு வழங்க வேண்டும்.

    இப்பணி மொடக்குறிச்சி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மற்றும் தோட்ட க்கலை உதவி இயக்குனர் மூலம் மேற்கொள்ள ப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவ லர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்களிடம் சமர்பித்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பே தங்களுக்கு நிலம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×