search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதி கட்டும் திட்டம்"

    • 4 ஆண்டுகளாக இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

    ேகாவை,

    கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி, சிறு, குறு தொழில்கள் என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள பகுதி என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கி வேலை செய்து வருகின்றனா். இதில் கணிசமான அளவில் பெண்களும் உள்ளனா். வெளியூா்களில் இருந்து வந்து பணியாற்றும் பெண்களுக்கு பாதுகா ப்பான இடம் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

    தனியாா் விடுதிகளில் அதிகபட்ச வாடகைக்கு தங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் கோவையில் பணிக்கு செல்லும் மகளிருக்கான விடுதி கட்டுவதற்கு சமூகநலத் துறை சாா்பில் 2019-20-ம் நிதியாண்டு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    50 போ் தங்கும் அளவுக்கு விடுதி கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகா ப்பான, குறைந்தபட்ச வாடகைக்கு விடுதி வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளாக இடம் ஒதுக்கீடு செய்யப்ப டாததால் திட்டம் செயல்ப டுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் வேலை க்கு செல்லும் மகளி ருக்கான விடுதி கட்டு வதற்கு ஆரம்பத்தில் வெள்ளக்கிணறு பகுதியில் இடம் வழங்கப்பட்டது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் துடியலூா் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான இடம் அளிக்கப்பட்டது.

    இந்த பகுதியில் இடம் அளவீடு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பின்னர் அந்த இடமும் பல்வேறு காரணங்களால் வழங்கப்படவில்லை. அதன்பின்னர் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு அருகே இருந்த இடம் அளிக்கப்பட்டது.

    அந்த இடத்துக்கு சமூகநலத் துறை சாா்பில் பணம் வழங்க வலியுறுத்தி உள்ளனா். ஆனால், திட்டத்தில் இட த்துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. விடுதி கட்டுவதற்கான நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று 4 ஆண்டுகளாக உரிய இடம் கிடைக்காமல் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்கு செல்லும் மகளிருக்கான விடுதி கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×