search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வால்ட் டிஸ்னி"

    • கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி உலகளவில் பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.
    • ஏற்கனவே கொரோனா காலத்தில் (2020) வால்ட் டிஸ்னி 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

    வாஷிங்டன்:

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை பணிநீக்கம் செய்தது. இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.

    இதற்கிடையே, உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், 5.5 அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை டிஸ்னி விரைவில் வெளியிட உள்ளது.

    ஏற்கனவே கொரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×