search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாமன ஏகாதசி"

    • புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வாமன ஏகாதசி.
    • அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி, வாமன ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதனை ஜெயந்தி ஏகாதசி என்றும் அழைப்பார்கள். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் வாமன ஏகாதசியில் விரதம் இருந்தால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதனையும் கடைபிடிக்க வேண்டும்.

    புரட்டாசி முழுவதுமே சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவில் வெறும் பால் மற்றும் பழங்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஏகாதசி அன்று பெருமாளின் பெருமைகளைப் பாடி பஜனைகளில் ஈடுபடலாம். அப்படி செய்ய இயலாதவர்கள் பெருமாள் துதிகளை ஒலிக்க விடலாம். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். பால், பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். கட்டாயமாக மோர் மற்றும் தயிர் எடுத்துக் கொள்ளக்கூடாது. காபி, டீ இவையும் ஆகாது.

    அப்படி கடுமையாக விரதம் இருந்த பின்னர் துவாதசியில் காலையில் துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்றைய உணவில் அகத்திக் கீரையும் நெல்லிகாயும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்த விரதத்தை கடைபிடித்தால் திருமாலின் மார்பில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீதேவி மகிழ்ந்து செல்வங்களை நமக்கு அள்ளி அளிப்பாள். மலைமகள் மகிழ்ந்து தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் அளிப்பாள். கலைமகள் நல்ல எண்ணங்களையும் கல்வியையும் அருள்வாள்.

    மாணவர்கள் இந்த வாமன ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் நல்ல நினைவாற்றல், நிறைய மதிப்பெண்கள் ஆகியவை கிடைக்கும்.

    ×