search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசுகி பாம்பு"

    • 2005ம் ஆண்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பூமிக்கு அடியில் மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள்.

    குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவமானது, பூமியில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பாம்பாக இருக்கலாம் என்றும் இது டைட்டனோபோவாவை விடவும் பெரியது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் கட்சி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அருகே, கடந்த 2005ம் ஆண்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, பூமிக்கு அடியில் மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

    அப்போது, அது ஒரு முதலை இனமாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. பிறகு, அந்த படிமப் பொருளை உத்தரகாண்டில் உள்ள ஐஐடி ரூர்க்கியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். 

    இந்த ஆய்வின் முடிவில், படிமப் பொருளாக கருதப்பட்டது பூமியில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பாம்புகளில் ஒன்று" என தெரியவந்துள்ளது.

    இந்த பாம்பிற்கு "வாசுகி இண்டிகஸ்" என ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்டது.

    அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்ட இனங்கள் பற்றிய ஆய்வில், " இந்த பாம்பு 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கட்ச்சின் சதுப்பு நிலத்தில் வாழ்ந்ததாகவும், பாம்பு 36 முதல் 50 அடி வரை நீளமாக இருந்ததாகவும்" கூறப்படுகிறது.

    மேலும், அளவில், வாசுகி இண்டிகஸ் தற்போது அழிந்து வரும் டைட்டனோபோவாவை விட பெரியதாக இருக்கலாம் என்றும் இது 42 அடி அளவுள்ள மிகப்பெரிய பாம்பு என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு டன் அல்லது 1,000 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இன்று வாழும் மிகப்பெரிய பாம்பு ஆசியாவின் 33 அடி உயரமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு ஆகும்.

    ×