search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன தணிக்கை"

    • வேலூர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வகையில் எஸ்.பி. ஆபீசில் பிரமாண்ட அரங்கம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போதை பொருள் கடத்தல், விற்பனை தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒவ்வொரு துறை வழியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

    குறிப்பாக மருந்தகங்களில் டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது.ஏனென்றால் சில மருந்துகளை குறிப்பாக மனநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது. மற்ற நகரங்களில் இதுபோன்ற குற்ற சம்பவம் நடந்துள்ளது.அதை தடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் சிலர் கூரியர் மூலம் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவதாகவும் புகார் வந்துள்ளது.அதை தடுப்பதற்காகவும் கூரியர் நிர்வாக ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

    போதை பொருள் ஒழிப்பை தடுக்கும் விதமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் காவல் மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காவல் மண்டபம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த காவல் மன்றம் போலீசாருக்கும் பள்ளிக்கும் இடையே இணைப்பு பாலமாக உள்ளது.பிரத்தியேகமாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் புகார் எண்ணில் இதுவரை 7 புகார்கள் வரப்பெற்றது.

    அதில் 6 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஒரு புகார் சரியான தகவல் இல்லை. வேலூர் மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய குழுவினர் அங்கு வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் உள்ள 7 சோதனைச் சாவடிகளில் குழுக்கள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இது தவிர ஊரகப் பகுதி வழியாக சிலர் கடத்துவதை தடுக்க அங்கேயும் மோட்டார் சைக்கிள் மூலம் போலீசார் ரோந்து சென்று தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    போதைப்பொருள் தடுப்பது குறித்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் செயல்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த கமிட்டி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பிரமாண்டமான அரங்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறினார்.

    வாழப்பாடி அருகே கஞ்சா கடத்திய‌ 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கவர்கல்பட்டி பிரிவு சாலை அருகே, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 45 கிலோ போதைப் பொருளான கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

    இதனையடுத்து, 45 கிலோ கஞ்சா ரொக்கப் பணம் ரூ. 90,000 மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா கடத்தியதாக முத்தம்பட்டி சி.எஸ்.ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), வசந்த்குமார் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×