search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிதடங்கள்"

    • விருதுநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 116-வது தேவர் ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு செல்லும் வாகனங்கள் கீழ்கண்டவாறு உள்ள அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி சேத்தூர், முறம்பு, ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், அழகாபுரி, அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    தோட்டிலோவன்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    பந்தல்குடி, அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    மல்லாங்கிணரில் இருந்து செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை (கல்குறிச்சி), கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்

    நரிக்குடி, பார்த்திப்ப னூர், அபிராமம், பசும் பொன்ஆகிய வழித்தடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்

    செங்கமல நாச்சியார்புரம் -கங்காகுளம், இரட்டை பாலம்-சிவகாசி பஸ் நிலையம், விளாம்பட்டி ஜங்சன்- எஸ்.எச்.என்.வி. பள்ளி, மீனாட்சிபுரம்- முஷ்டகுறிச்சி, மந்திரி ஓடை-முடுக்கன்குளம், காரியாபட்டி- புதுப்பட்டி, கல்குறிச்சி ஜங்சன்-கிருஷ்ணாபுரம், ராமலிங்கா மில்-குலசேகர நல்லூர், தமிழ்பாடி ஜங்சன்-ராமசா மிபட்டி, திருச்சுழி-மயிலி ஜங்சன், திருச்சுழி-பச்சேரி ஜங்சன், பூமாலைபட்டி ஜங்சன்-முத்துராமலிங்க புரம்புதூர், வீரசோழன் -மீனாகுளம், வீரசோழன்- கீழசெம்பூர் ஜங்சன், தேளி-தேளி (எல்லை), ரெட்டைகுளம்-ஆலாந்தூர், செங்குளம்-கருவக்குடி, கள்ளக்குறிச்சி-பூலாங்கால், ஒத்தக்கடை-எம்.ரெட்டியப்பட்டி, கட்டனூர்-பொட்டப் பச்சேரி, கட்டனூர்-கருவக் குடி ஜங்சன் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட வழி தடங்கள் ஆகும்.

    மேலும் தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். நடை பயணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

    வாகனங்களில் வெளிபுறத்தில் நின்றோ, நடனமாடி கொண்டோ மற்றும் மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ செல்லக்கூடாது.

    காவல்துறையினரின் முழுமையான தணிக்கைக்கு பின்பு வாகன அனுமதி சீட்டு பெற்று வாகனத்தில் முன்புறம் மற்றும் பின்புறம் ஒட்டி செல்ல வேண்டும். சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின் போதும், காவல்துறை யினரால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    மது அருந்திவிட்டு வாக னங்களில் செல்லக்கூடாது. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி, மது பானங்கள், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கல், கத்தி, கம்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். வாகனங்களில் சென்று வரும் போது தேவையற்ற முறையில் பிற மதத்தினரையோ, சமுதாயத்தினரையோ புண்படுத்தும் வகையில் பேசுவதோ, கோஷங்கள் எழுப்புவதோ கூடாது.

    வாகனங்களில் உள்ள மேற்கூரை அகற்றப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாகவோ, ஆபத்தை விளைவிக்கும் வகையில் முந்தி செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் சம்பந்தப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×