search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு"

    • ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு தினசரி வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி, ஊஞ்சாம்பட்டி மற்றும் நாகலாபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நாகலாபுரம் ஊராட்சியில் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் நீர் செறிவூட்டு குழி அமைத்தல் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைத்தல் பணியினையும், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மண் வரப்பு அமைத்தல் பணியினையும்,

    ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைத்தல், ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் ஜெயம் நகர் 4வது தெருவில் சிமிண்ட் சாலை அமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஏ.டி.கே மில் அருகில் சிமிண்ட் தடுப்பணை அமைத்தல் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணாபுரம் ரேசன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம்,

    எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு தினசரி வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக தாடிச்சேரி ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×