search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வ.உ.சி. சிலை"

    • வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 152-வது பிறந்தநாளை யொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சோழவந் தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அனைவித்து மரியாதை செலுத்தினார்.

    ஒன்றிய செயலாளர் தன் ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், அவைத் தலைவர் நடராஜன், நகர செயலாளர் ரகுபதி, பேரூ ராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, ராகுல், சதிஷ், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அனைத்து மரியாதை செலுத்தினர்.

    ஊராட்சி மன்ற தலைவர் தீபா நந்தினி மயில்வீரன், பெரியஊர்சேரி செந்தில் குமார், கவுன்சிலர் ரேவதி, சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி செயலா ளர் சக்கரபாணி தலைமை யில் தொகுதி தலைவர் சங் கிலி முருகன் மற்றும் நிர் வாகிகள் மாலை அணி வித்தனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, மண்டல் தலைவர் தங்கதுரை, பொதுசெய லாளர்கள் செல்லப்பாண்டி, முத்துக்குமரன், ஒன்றிய பொருளாளர் மறவபட்டி மாரிச்செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) சார்பில் மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேது சீனிவாசன், முத்து கிருஷ்ணன் மற்றும் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    அகில இந்திய காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் கள் சுப்பாராயலூ, காந்திஜி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, மனித உரிமை மாவட்ட தலைவர் முத்து, பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செய்தனர். முக் குலத்தோர் சமுதாயம் சார்பில் எஸ்.டி.எம் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செய்தனர். முன்னதாக விழா குழுவி னர்கள் சதீஷ், கார்த்திக், முத்துராஜா, மற்றும் பிள்ளைமார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பாலா பிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    தொடர்ந்து கிராம பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதான மும் நடைபெற்றது.

    • வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ஸ்ரீவில்லிப்புத்தூர் கருப்பையா, கூமாப்பட்டி பழனி ஆகியோர் பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    வ.உ.சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் உள்ளஅவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் செய்தித் தொடர்பாளர் கண்ணன்ஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர பொறுப்பாளர் ராமகுரு, வத்திராயிருப்பு ஒன்றிய பொறுப்பாளர்கள் வத்திராயிருப்பு ஒன்றிய பொறுப்பாளர்கள் குண்டுமணி என்ற முத்தையா, ராமராஜ், ராஜபாளையம் வடக்கு நகரப் பொறுப்பாளர் முருகதாஸ், மகளிரணி கவிதாசரவணன், ஸ்ரீவில்லிப்புத்தூர் கருப்பையா, கூமாப்பட்டி பழனி ஆகியோர் பங்கேற்றனர்.

    ×