search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிஸ் டிரஸ்"

    • இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.
    • இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.

    பீஜிங் :

    இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீனாவுடான உறவில் கண்டிப்புடன் இருப்பேன் என்றும், இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "சில இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத நீங்கள் சீனாவை அச்சுறுத்தல் என்று அழைப்பது உள்பட சீனாவை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    • இங்கிலாந்து பிரதமர் தேர்தல் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.
    • போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 2-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    அந்த வகையில் முதல் கட்ட தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் பல்வேறு சுற்றுகளாக வாக்களித்து போட்டியிட்ட 8 பேரில் 2 பேரை இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்தனர். அதன்படி இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகி உள்ளனர்.

    இவர்கள் இருவரில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். அதற்கான தேர்தல் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை நடக்கிறது.

    கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள். இடையே நடந்த முதல் கட்ட தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முதல் இடத்தை பிடித்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ரிஷி சுனக்கை காட்டிலும், லிஸ் டிரஸ்சுக்கே அதிக ஆதரவு உள்ளது.

    இதனிடையே பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கை விட 28 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனால் இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வருகிறது.
    • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அந்த வகையில், 8 எம்.பி.கள் வேட்பாளர்களாக களமிறங்கிய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. 3 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற பென்னி மார்டன்ட் போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஐந்தாவது சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 137 பேர் ஆதரவு பெற்றார். லிஸ் டிரஸ் 113 பேரின் ஆதரவு பெற்றார். வர்த்தக மந்திரியாக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 105 வாக்குகள் கிடைத்தன.

    இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

    புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள 2 லட்சம் உறுப்பினர்களும் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வரும் சூழ்நிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×