search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதி விபத்து"

    • பாலத்தை கடக்க முயன்ற போது விபரீதம்
    • போக்குவரத்து பாதிப்பு

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு பெயிண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.

    இந்த லாரி ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் அக்ராவரம் ரெயில்வே தரைப் பாலத்தை கடக்க முயன்றது.

    அப்போது கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ரெயில்வே துறையால் பாலத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது வேகமாக மோதியது.

    இதில் தரையில் புதைத்து வைக்கப்பட் டிருந்த அடிப்பகுதி பெயர்ந்து வெளியே வந்தது. லாரியும் தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது. டிரைவர் லாரியை பின்னால் நகர்த்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நர்மதா இவர் வழூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் இசை செல்வன் என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சசிகுமார் நேற்று காலை வேலைக்கு சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் ஆரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே லாரி சசிகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இதையடுத்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டரை சிறைபிடித்து போராட்டம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அடுத்த பெருமாள் குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிலர் லாரி மூலம் ஏரி மண் கடத்தல் நடக்கிறது.

    நேற்று இரவு அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கள்ளத்தனமாக ஏரி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது.

    இதில் பைக்கில் சென்ற பெருமாள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (வயது 42) என்பவரின் கால்கள் முறிந்தது.விபத்தில் காயம் அடைந்த பூபாலனை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வாகனத்தை மறித்து சிறை பிடித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காட்பாடி டி.எஸ்.பி பழனி பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் 2 மணி நேரம் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    விபத்து குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது.
    • இந்த விபத்தினால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொப்பூர்,

    மத்திய பிரதேசத்தில் இருந்து இரும்பு காயில் ஏற்றி லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியை அரவங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலு (வயது55) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் நாமக்கல் செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (40) என்பவர் உடன் வந்தார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் அருகே இன்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. அந்த வேகத்தில் தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் உள்ள சென்டர் மீடியனிலும் இரும்பு காயில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 டிரைவர்களும் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள் போக்குவரத்தை சரி செய்வதற்காக லாரியில் இருந்த சரக்குகளை இறக்கி வைத்து லாரியை அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தினால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×