என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தொப்பூர் கணவாய் அருகே இன்று காலை  தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து
  X

  தொப்பூர் கணவாய் அருகே இன்று காலை தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது.
  • இந்த விபத்தினால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  தொப்பூர்,

  மத்திய பிரதேசத்தில் இருந்து இரும்பு காயில் ஏற்றி லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

  இந்த லாரியை அரவங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலு (வயது55) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் நாமக்கல் செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (40) என்பவர் உடன் வந்தார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் அருகே இன்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது.

  அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. அந்த வேகத்தில் தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் உள்ள சென்டர் மீடியனிலும் இரும்பு காயில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 டிரைவர்களும் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள் போக்குவரத்தை சரி செய்வதற்காக லாரியில் இருந்த சரக்குகளை இறக்கி வைத்து லாரியை அப்புறப்படுத்தினர்.

  இந்த விபத்தினால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×