search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஸ்"

    • ரோஸ்கார்டன் 1500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
    • ரூ.1.கோடியே 39 லட்சத்து 90ஆயிரத்து 690 வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானலில்:

    கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஸ்கார்டனை கடந்த ஓராண்டில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். அதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.2.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    பொதுவாக கொடைக்கானலுக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் மலர்கள் பூத்து குலுங்கும். இதை பார்த்து ரசிக்க வாரவிடுமுறை நாட்களில் 3000 முதல் 5000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சீசன் காலங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 2022 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2023 மார்ச் 31-ந்தேதி வரை 5 லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்கா வை பார்வை யிட்டுள்ளனர். பூங்காவுக்காக நுழைவுசீட்டு, ஸ்டில் மற்றும் வீடியோ காமிராக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் மூலம் ரூ.1.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ரோஸ்கார்டன் 1500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

    இந்த பூங்காவைகடந்த ஓராண்டில் 4லட்சத்து 55ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.1.கோடியே 39 லட்சத்து 90ஆயிரத்து 690 வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×