search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரையண்ட் பூங்கா"

    • தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
    • சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக கடந்த 26-ந்தேதி கோடைவிழா மலர் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் மலர் கண்காட்சி 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்றுவரை நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே பலர் ஊர் திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 59 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வருவாய் ரூ.19 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 65 ஆயிரத்து 971 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.20லட்சத்து 27 ஆயிரத்து 775 வசூல் ஆகி உள்ளது.

    கடந்த ஆண்டை விட கூடுதல் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும் வருவாயும் அதிகரித்துள்ளது என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
    • கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கிய 60-வது மலர் கண்காட்சியின் 2-ம் நாள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பழங்கால மன்னர்களின் போர் சாகசங்களை விளக்கும் வண்ணம் மல்லர் கம்பம் என்ற சாகச போட்டியில் சிறுவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு வியக்கும் வகையில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு ஆடிய கரகாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சியான பொய்க்கால் குதிரை ஆட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் திண்டுக்கல் குழுவினரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு சுத்தல், சுருள் வாள்வீச்சு நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவ்வப்போது சாரல் மழை தலை காட்டினாலும் அதை பொருட்படுத்தாது மலர் கண்காட்சி நிகழ்வுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    26-ந்தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோரின் அனுமதிபெற்று மேலும் 2 நாட்கள் 30-ந்தேதி வரை மலர்கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.
    • சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

    கொடைக்கானல் :

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் சிறிது நேரம் வெயிலும், மாலை வேளையில் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே கொடைக்கா னல் நகர் பகுதிகள் மட்டு மின்றி பல்வேறு இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டது.

    கொடைக்கானல் அண்ணா சாலை, ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் கொடைக்கான லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையால் நிலவிய குளிரை அனு பவித்து மகிழ்ச்சியடை ந்தனர்.

    மேலும் பிரையண்ட் பூங்காவில் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் பூக்கள் அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நேரத்தில் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் சாலைகளில் நீர் வெள்ளம்போல் வழிந்தோடியதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இருந்த போதும் பள்ளி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சிறுவர்கள் பிரையண்ட் பூங்காவில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருவதை பெற்றோர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர்.

    • ரோஸ்கார்டன் 1500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
    • ரூ.1.கோடியே 39 லட்சத்து 90ஆயிரத்து 690 வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானலில்:

    கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஸ்கார்டனை கடந்த ஓராண்டில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். அதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.2.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    பொதுவாக கொடைக்கானலுக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் மலர்கள் பூத்து குலுங்கும். இதை பார்த்து ரசிக்க வாரவிடுமுறை நாட்களில் 3000 முதல் 5000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சீசன் காலங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 2022 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2023 மார்ச் 31-ந்தேதி வரை 5 லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்கா வை பார்வை யிட்டுள்ளனர். பூங்காவுக்காக நுழைவுசீட்டு, ஸ்டில் மற்றும் வீடியோ காமிராக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் மூலம் ரூ.1.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ரோஸ்கார்டன் 1500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

    இந்த பூங்காவைகடந்த ஓராண்டில் 4லட்சத்து 55ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.1.கோடியே 39 லட்சத்து 90ஆயிரத்து 690 வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    கொடைக்கானல்:

    இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கின்றனர்.

    இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கி தானாக உதிர்ந்து விழுகின்றன, இந்த வகை மலர்களில் இருந்து தேன்சிட்டு குருவிகளும், தேனீக்களும் தேன் எடுக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்த செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதத்தில் குளுகுளு சீசன் தொடங்கும். இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு குளுகுளு சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட மலர் செடிகள் நடும் பணி நடந்தது. தற்போது 2-ம் கட்ட மலர் செடிகள் நடும் பணி நேற்று காலை தொடங்கியது.

    இதற்காக கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டேலியா மலர் செடிகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும். குளுகுளு சீசன் தொடங்கும்போது சுற்றுலா பயணிகள் வரவேற்கும் விதமாக டேலியா மலர் செடிகள் பல நிறங்களில் மலர்ந்து காணப்படும் என்று பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.

    ×