search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலர் கண்காட்சி நிறைவு- கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வருவாய் ரூ.20.27 லட்சம்
    X

    பிரையண்ட் பூங்காவில் மலர்களின் அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

    மலர் கண்காட்சி நிறைவு- கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வருவாய் ரூ.20.27 லட்சம்

    • தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
    • சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக கடந்த 26-ந்தேதி கோடைவிழா மலர் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் மலர் கண்காட்சி 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்றுவரை நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே பலர் ஊர் திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 59 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வருவாய் ரூ.19 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 65 ஆயிரத்து 971 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.20லட்சத்து 27 ஆயிரத்து 775 வசூல் ஆகி உள்ளது.

    கடந்த ஆண்டை விட கூடுதல் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும் வருவாயும் அதிகரித்துள்ளது என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×