என் மலர்

  தமிழ்நாடு

  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி 2 நாள் மேலும் நீட்டிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
  X

  மலர் கண்காட்சியில் சாகச நிகழ்ச்சி நடத்திய சிறுவர்களை படத்தில் காணலாம்.

  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி 2 நாள் மேலும் நீட்டிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
  • கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.

  கொடைக்கானல்:

  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கிய 60-வது மலர் கண்காட்சியின் 2-ம் நாள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பழங்கால மன்னர்களின் போர் சாகசங்களை விளக்கும் வண்ணம் மல்லர் கம்பம் என்ற சாகச போட்டியில் சிறுவர்கள் கலந்து கொண்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு வியக்கும் வகையில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.

  அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு ஆடிய கரகாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சியான பொய்க்கால் குதிரை ஆட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் திண்டுக்கல் குழுவினரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு சுத்தல், சுருள் வாள்வீச்சு நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்களை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடையும் வகையில் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.

  இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அவ்வப்போது சாரல் மழை தலை காட்டினாலும் அதை பொருட்படுத்தாது மலர் கண்காட்சி நிகழ்வுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

  26-ந்தேதி தொடங்கிய மலர்கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோடைவிழாவும் நீட்டிக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோரின் அனுமதிபெற்று மேலும் 2 நாட்கள் 30-ந்தேதி வரை மலர்கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

  Next Story
  ×