search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி பதுக்கல்"

    • மதுரையில் ஆலையில் ரேசன் அரிசி பதுக்கிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கோழி தீவனமாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அரைத்து, கோழி தீவனமாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் மதுரை மண்டல ரேசன் அரிசி தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் போலீசார், சோதனை நடத்தினர். அப்போது 4 அரிசி ஆலைகளில் 27 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனை நடத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    சின்ன அனுப்பானடியில் உள்ள அரிசி ஆலையில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அந்த அரிசி ஆலையில் 23 சாக்கு மூடைகளில் 575 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் வண்டியூர் கோமதிபுரம், செவ்வந்தி வீதி தெய்வேந்திரன் (33), காமராஜர்புரம் கக்கன் தெரு முத்துராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (24), பீகார் மாநிலம் சுரேந்திர ராய் மகன் மனிஷ் குமார் (23), சுதீர்குமார் (25) என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்

    • வெளி மாநிலத்திற்கு கடத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கியது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் டி.எஸ்.பி. கணேஷ் மேற்பார்வையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் ரகுராம் உள்ளிட்ட போலீசார் ஜே.என்.ஆர் நகர் பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கும் ரேசன் அரிசியை 30 பைகளில 1.5 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.

    ×