search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெகானா பாத்திமா"

    • சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியபோது கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கியவர் ரெகானா பாத்திமா.
    • பெண் சமூக ஆர்வலர் மீது அவரது தாயாரே புகார் அளித்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் போராட்டம் நடத்தியபோது கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கியவர்.

    அதன்பின்பு மாட்டு இறைச்சி குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இதற்காக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ரெகானா பாத்திமாவின் தாயார் பியாரி ஆலப்புழா வடக்கு போலீசில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகள் வீட்டில் தங்கி இருந்தபோது தன்னை அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார்.

    இதன் காரணமாக அவரது வீட்டில் இருந்து வெளியேறி உறவினர் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கி இருப்பதாகவும், இதற்காக தனது உறவினர்களை ரெகானா பாத்திமா மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக ரெகானா பாத்திமா மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியிருந்தார்.

    இப்புகார் தொடர்பாக போலீசார் ரெகானா பாத்திமாவை போலீஸ் நிலையம் வரவழைத்தனர். பின்னர் அவரிடம் தாயாருக்கு இடையூறு செய்யக்கூடாது என எச்சரித்ததோடு இது தொடர்பாக அவரிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    பெண் சமூக ஆர்வலர் மீது அவரது தாயாரே புகார் அளித்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெகானா பாத்திமா சமூக வலைதளத்தில் மாட்டுகறி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
    • எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜிஸ் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா.

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கோர்ட்டு அனுமதி வழங்கிய போது அதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது பெண் சமூக ஆர்வலர்கள் பலரும் கோவிலுக்கு செல்ல முயன்றனர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமாவும் இந்த சர்ச்சையில் சிக்கினார்.

    அதன்பின்பு அவர் சமூக வலைதளத்தில் மாட்டுகறி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜிஸ் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார் ரெகானா பாத்திமா மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரெகானா பாத்திமா கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில் தன்மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு கேரள ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரெகானா பாத்திமா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது.

    ×