search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபே கார்டு"

    • ஈச்சனாரியில் வருகிற 15-ந்தேதி அமைச்சர் முத்துசாமி வழங்குகிறார்
    • கோவையில் 2.81 லட்சம் விண்ணப்பங்கள் நேரடியாக களஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கான முன்னேற் பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்- அமைச்சர், சிறப்பு திட்டமாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறி வித்தார். இந்த திட்டத்தை வருகிற 15-ந் தேதி அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடந்த முதல் கட்ட முகாம், 2-வது கட்ட முகாம் மற்றும் சிறப்பு முகாம்கள் ஆகிய வற்றின் மூலம் 7,41,799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,81,942 விண்ணப்பங்கள் களஆய்வு மேற்கொள்ள வரப்பெற்றது.

    தற்போது வரை வரு வாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, மற்றும் தோட்டக்கலைத்துறை, உள்ளிட வேளாண்மைத் துறை ்ட துறை அலுவலர்கள் மற்றும் நியாயவிலைகடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 15-ந் தேதி கோவை மாவட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு பணிகள், வாகன நிறுத்துமிடங்கள், வாகன போக்குவரத்து போன்ற பணிகளை போலீஸ் துறையினால் மேற்கொள்ளவேண்டும்.

    மேலும் பயிற்சி பெற்ற டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியா ளர்கள் அடங்கிய மருத்துவ குழு ஆம்புலன்சு வசதியுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மோ.ஷர்மிளா. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) கோகிலா, வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித் துணை கலெக்டர்கள் சமூக பாதுகாப்புத் திட்டம் சுரேஷ், குணசேகரன், மற்றும் துறை மாவட்ட சார்ந்த அரசு வழங்கல் அலுவலர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூபே கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

    ×