search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிவர்"

    • ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • புதிய ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ரிவர், இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. ரிவர் இண்டீ என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரிவர் இண்டீ விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரிவர் இண்டீ வினியோகம் ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய ரிவர் இண்டீ மாடலில் பிரமாண்ட முன்புறம், சதுரங்க வடிவ டூயல் எல்இடி ஹெட்லேம்ப், முன்புறம் வளைந்த அப்ரன் உள்ளது.

     

    பக்கவாட்டில் பாக்சி ரியர் பதுகியில் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் கிராஷ் கார்டுகள் ஸ்கூட்டரின் பாடி பேனலில் இண்டகிரேட் செய்யப்படுகிறது. இத்துடன் பேனியர் ஸ்டே, க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 12 லிட்டர் முன்புற குளோவ் பாக்ஸ், 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே, இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ரிவர் இண்டீ எலெ்க்ட்ரிக் ஸ்கூட்டர் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 6.7 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 120 கிலோமீட்டர் ரேன்ஜ், அதிகபட்சம் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    முதற்கட்டமாக ரிவர் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை பெங்களூருவில் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் முன்பதிவு ரிவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடைபெற்று வருகிறது.

    ×