search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமராஜ்ஜிய ரத யாத்திரை"

    • அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராமராஜ்ய ரத யாத்திரையானது இன்று குமரி மாவட்டம் வந்தது.
    • மார்த்தாண்டம் பம்மம், தக்கலை பார்த்தசாரதி கோவில், பார்வதிபுரம் ஊசிக்காட்டு சுடலை கோவில் போன்ற இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராமராஜ்ய ரத யாத்திரையானது இன்று குமரி மாவட்டம் வந்தது. களியக்காவிளையில் காலை 9 மணிக்கு இந்து தர்ம வித்யா பீட தலைவர் சுவாமி சைதானந்தாஜி மகராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்த்தாண்டம் பம்மம், தக்கலை பார்த்தசாரதி கோவில், பார்வதிபுரம் ஊசிக்காட்டு சுடலை கோவில் போன்ற இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அய்யப்ப சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா, இந்து தர்ம பீட சமயவகுப்பு பொறுப்பாளர் ஆர்.கே. ராமச்சந்திரன், இந்து முன்னணி முன்னாள் தலைவர் மிசா சோமன், மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். 

    ×