search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தசோகை நோய்"

    • ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றி விளக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஆதர்ஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரகத் சுல்தானா தலைமை தாங்கினார். திட்ட மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, இந்திரா, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி வரவேற்று பேசினார். முகாமில் ரத்தசோகை கண்டறியும் முறை பற்றியும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்ளுதல், மாதத்திற்கு ஒருமுறை கிருமி நாசினியை உட்கொள்ளுதல் பற்றியும் மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. முடிவில் பள்ளி துணை முதல்வர் பொன் மேரி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி செய்திருந்தார்.

    • டாக்டர் பிரியங்கா ரத்தசோகைக்கான தீர்வுகள் குறித்து பேசினார்.
    • ரத்த சோகைக்கான உணவு முறைகள் குறித்து மாணவிகள் உரையாற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ரத்தசோகை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் ரத்தசோகை நோய் பற்றியும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் பிரியங்கா பேசினார். ரத்த சோகைக்கான யோகா பயிற்சிகள், உணவு முறைகள் குறித்து மருத்துவக்கல்லூரி மாணவிகள் விஜயலெட்சுமி, ராகவிஷெரின், புவனேஷ்வரி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மருத்துவ கல்லூரியின் மாணவ-மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    ×