search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி"

    வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி தனது வருமானம் மற்றும் சொத்து விபரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். #Modi #ModiownsNoCar #ModiassetsworthRs2.5crore
    லக்னோ:

    2014-ம் ஆண்டு வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனக்கு அடுத்தபடியாக வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதே தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    வேட்பு மனுவுடன் தனது வருமானம் மற்றும் சொத்து விபரங்களையும் பிரமாணப் பத்திரத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களின்படி, மோடியின் வருமானம் என்பது அவரது அரசு சம்பளம் மற்றும் வங்கிகளில் வைத்திருக்கும் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மட்டுமே.



    அவ்வகையில் கடந்த 2014-ம் ஆண்டில் அவரது மொத்த வருமானம் 9.69 லட்சம் ரூபாய், 2015-ம் ஆண்டில் 8.58 லட்சம் ரூபாய், 2016-ம் ஆண்டில் 19.23 லட்சம் ரூபாய், 2017-ம் ஆண்டில் 14.59 லட்சம் ரூபாய், 2018-ம் ஆண்டில் 19.92 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அவருக்கு மொத்தம் 2.51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு 1.41 கோடி ரூபாய். அசையாச் சொத்துகளின் மதிப்பு 1.1 கோடி ரூபாய். அவரது கையிருப்பில் தற்போது இருக்கும் ரொக்கப்பணம் 38 ஆயிரத்து 750 ரூபாய்.

    தனக்கு கடன்கள் ஏதுமில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் வருமான வரித்துறையிடம் இருந்து 2.2 லட்சம் ரூபாய் வரவேண்டிய நிலுவைத்தொகையாக உள்ளது.

    மற்றபடி, தனது பெயரில் சொந்தமாக கார் அல்லது இருசக்கர வாகனம் ஏதுமில்லை என மோடியின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Modi #ModiownsNoCar #ModiassetsworthRs2.5crore  
    ×