search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்பாதி கிராமம்"

    • கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி.
    • மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்லக்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சினைக்குள்ளான திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந்தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    இதனை தொடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தினார்.

    இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

    அப்போது வருகிற 31-ந்தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    அதன் பிறகும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் மதமாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்தனர்.

    இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ×