search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலாண்மை பணிகள்"

    • பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரை–ப்படி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மெலட்டூர் கடைவீதி மற்றும் வடக்குத்தெருவில் நடைபெற்றது.
    • வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தர வலியுறுத்தப்பட்டு குப்பைகளை பிரித்து தருதல் குறித்து செயல் விளக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவி–ன்படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரை–ப்படியும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மெலட்டூர் கடைவீதி மற்றும் வடக்குத்தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர்கள் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தர வலியுறுத்தப்பட்டது. அப்போது குப்பைகளை பிரித்து தருதல் குறித்து செயல் விளக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ் கலந்து கொண்டு குப்பைகளால் ஏற்படும் பிரச்சனைகள் நோய்கள் குறித்தும் குப்பைகளை தீர்வு செய்வது குறித்தும் குப்பைகளை உரமாக்கி பயன்படுத்துவது, மக்காத குப்பை மறுசுழற்சி குறித்தும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே எடுத்துரைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், துணைத்தலைவர் பொன்னழகு, மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×