search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் அறிவிப்பு"

    • கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்
    • கடலூர் மாநகராட்சியில் இதுவரை 30 மாடுகளும், 180 பன்றிகளும் பிடிக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடு், பன்றி் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் வெளியில் சுற்றினால் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து, கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாபர் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் மற்றும் பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர்.

    மேலும் அதன் உரிமையாளர்கள் வந்தபோது அவர்களிடம் உரிய அபராதம் பெறப்பட்டு வருங்காலங்களில் சாலைகளில் பன்றிகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். கடலூர் மாநகராட்சியில் இதுவரை 30 மாடுகளும், 180 பன்றிகளும் பிடிக்கப்பட்டுள்ளது. இது போனற நடவடிக்கைகளினால் வருங்காலங்களில் மாநகராட்சி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். பொதுமக்களும் இடையூறு இன்றி சாலையில் செல்லலாம். மாநகராட்சி ஊழியர்கள் தொடர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்.

    ×