search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த முன்னோடிகள்"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
    • பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், நூலக திறப்பு விழா, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்பு நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    முதலில் வேர்க்கிளம்பி க்கு சென்ற அவர், சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற வகையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தை திறந்து வைத்தார். பின்பு அங்கி ருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டப த்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    பின்பு நாகர்கோவில் கங்கா கிராண்டியூர் மண்டபத்தில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கான பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500 பேர், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 500பேர் என கழகத்தின் மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் ரூ1கோடி மதிப்பிலான பொற்கிழிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், ஒன்றிய செயலாளர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் சோமு, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார். அதன்பிறகு மாலையில் ஈத்தாமொழி சந்திப்பில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை அமை ச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    பின்பு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு நடக்கும் ஆய்வு கூட்ட த்தில் பங்கேற்கிறார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடக்கும் இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகை, அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×