search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா"

    காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் படுகொலைகள் குறித்து நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும் என முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா தெரிவித்தார். #FarooqAbdullah
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பலர் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா, காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் படுகொலைகள் குறித்து நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.



    தெற்கு காஷ்மீரில் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் படுகொலைகள் தொடர்பாக  உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக எனது மகன் உமர் அபதுல்லா தொடர்ந்து பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பாஜக தனது ஆதரவை விலக்கியது. இதையடுத்து, மெகபூபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீண்டும் வேறொரு கட்சியுடன் கூட்டணி வைக்க முயன்றதால் மாநில ஆளுநர் சட்டசபையை கலைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #FarooqAbdullah
    ×