search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வன்"

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 19 அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி சார்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 18 வகையான திறன் பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இதுவரை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 19 அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி சார்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கு அவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்தவும், மாநிலத்தை இந்தியாவின் திறன் மையமாக மாற்றவும் தேவை அடிப்படையிலான மற்றும் தொழில் சார்ந்த திறன்களை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு பல்வேறு குறுகிய கால திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், சேலம் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் அமைந்துள்ள திறன் பயிற்சி நிலையங்களில் 2 மற்றும் 4 சக்கர வாகனப் பராமரிப்பு, ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னிஷியன், சரக்கு கண்காணிப்பு நிர்வாகி, ஒப்பனைக் கலைஞர், சுய தொழில் தையல்காரர், சி.சி.டி.வி. இன்ஸ்டாலேஷன், நுண்ணீர் பாசன தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான திறன் பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திறன் பயிற்சி நிலையங்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2200 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில் 750 பயிற்சியாளர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×