search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "I"

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஐ’.
    • இப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஐ'. இதில், விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இப்படத்தின் புதுச்சேரி விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், 'ஐ' படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீ விஜயலட்சுமி ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஐ' என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. தமிழில் 'ஐ' என்பது வியப்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டுமென வாதிட்டார்.


    இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்கான சலுகையாக அரசு கேளிக்கை வரி விலக்கை அறிவித்தது. அந்த சலுகையை உரிமையாக கோர முடியாது. நிபந்தனைகள் பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்கும். பெயரில் தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்திற்காகவே கேளிக்கை வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 19 அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி சார்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 18 வகையான திறன் பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இதுவரை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 19 அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி சார்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இளைஞர்களுக்கு அவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்தவும், மாநிலத்தை இந்தியாவின் திறன் மையமாக மாற்றவும் தேவை அடிப்படையிலான மற்றும் தொழில் சார்ந்த திறன்களை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு பல்வேறு குறுகிய கால திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், சேலம் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் அமைந்துள்ள திறன் பயிற்சி நிலையங்களில் 2 மற்றும் 4 சக்கர வாகனப் பராமரிப்பு, ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னிஷியன், சரக்கு கண்காணிப்பு நிர்வாகி, ஒப்பனைக் கலைஞர், சுய தொழில் தையல்காரர், சி.சி.டி.வி. இன்ஸ்டாலேஷன், நுண்ணீர் பாசன தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான திறன் பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திறன் பயிற்சி நிலையங்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2200 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில் 750 பயிற்சியாளர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×