search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலுதவி பெட்டி"

    • காலாவதியான அரசு பஸ்களை உடனடியாக மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும்.
    • எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர்:

    தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் உருக்குலைந்து பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இயக்க தகுதியில்லாத பஸ்கள் இயக்கப்படுவதால், பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    மேலும் அரசு பஸ்களில் முதலுதவிப்பெட்டியும் இல்லை. இதனால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    பயணிகள் கூறுகையில், காலாவதியான அரசு பஸ்களை உடனடியாக மாற்றி புதிய பஸ்களை இயக்க வேண்டும். பெரும்பாலான பஸ்களில் முதலுதவி பெட்டி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதில்லை. அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றனர்.

    திருப்பூர் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பழைய பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டிகள் இல்லாத பஸ்களில் உடனடியாக பெட்டி அமைத்து மருந்து உள்ளிட்டவை வைத்து பராமரிக்கப்படும் என்றனர்.

    • திருச்சியில் தனியார் நிறுவனம் சார்பில் கழிவு நீர் அகற்றும் பணியாளர்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது
    • இந்த நிகழ்வில் திருச்சி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்றுனர் ராதாகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்

    திருச்சி:

    உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கழிவுநீர் அகற்றும் வாகன பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி மற்றும் உபகரணங்கள் அடங்கிய முதலுதவி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

    இந்தியன் இன்ஸ்டிடியூட் பார் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் திருச்சியில் செயல்பட்டு வரும் நகர் முழுவதும் உள்ளடங்கிய சுகாதாரம் என்கிற திட்டத்தின் மூலம் கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் வாகன பணியாளர்கள் மற்றும் நுண்ணுருவம் செயலாக்கம் மையப் பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி மற்றும் முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது

    இந்த நிகழ்வில் திருச்சி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்றுனர் ராதாகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்.

    மேலும் தூய்மை பணியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் ஆபத்துகளில் இருந்து அவர்களது உயிர்களை காக்க உதவும் முதலுதவி பொருட்கள் அடங்கிய முதல் உதவி பெட்டிகளும் வழங்கப்பட்டது.

    இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர் நல அலுவலர் ஷர்மிலி, கலாமணி மற்றும் தனியார் நிறுவனத்தின் தலைமை வல்லுனர் சுகந்தா பிரிசில்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×