search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் செயல்பட தொடங்கியது"

    • கனி மார்க்கெட் பல இடத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது.
    • சில்லரை விற்பனை இன்று 35 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டு வந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் இயங்கி வந்தன.

    இந்த வளாகத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

    ஆனால் மாத வாடகையாக ரூ.31,500-ம், வாய்ப்பு தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படா மலேயே உள்ளது.

    இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்கா லிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர்.

    இதையடுத்து சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது.

    சுமார் 86 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கட்டுமான பணிகள் முடிவடைந்து மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கனி மார்க்கெட் பல இடத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று வாரச்சந்தை நடந்தது.

    பொதுவாக வாரச்சந்தைக்கு மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவது வழக்கம்.

    ஆனால் இன்று கூடிய சந்தையில் குறைந்த அளவே வியாபாரி கள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    அதேநேரம் உள்ளூர் மாவட்ட வியாபாரிகள் ஓரளவு வந்திருந்ததால் சில்லரை விற்பனை இன்று 35 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த வாரம் நிறைய புது ரக துணிகள் வர இருப்பதால் வியாபாரம் அடுத்த வாரம் முதல் சூடு பிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஜவுளி சந்தை செயல்பட தொடங்கியதால் அந்த பகுதிகளை கட்ட தொடங்கியுள்ளது.

    • கோபி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் எக்கோ ஸ்கேன் வசதி செயல்பட உள்ளது.
    • இரு தினங்களில் செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், கள்ளிப்பட்டி, கூகலூர், கெட்டிசெவியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு எக்கோ ஸ்கேன் வசதி செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக எக்கோ ஸ்கேன் செயல்ப்படவில்லை.

    இதனால் இங்கு வரும் நோயாளிகள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் எடுத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் எக்கோ ஸ்கேன் வசதி செயல்பட உள்ளது. செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ×