search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய பிரச்சினை"

    • அவிநாசி கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
    • பல மாதங்களாக தொமுச., சாா்பில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை.

    திருப்பூர் :

    மின்வாரிய பிரச்சினைகள் தொடா்பாக அளிக்கப்படும் புகாா்கள் மீது அலுவலா்கள் அலட்சியமாக செயல்படுவதாக மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.வினர் குற்றம்சாட்டியுள்ளனா்.

    அவிநாசி கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச. மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் முத்துவேலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மின்பகிா்மான வட்ட பகுதிகளில் உள்ள மின்சார வாரிய பிரச்னைகள் தொடா்பாக அளிக்கும் புகாா் மனுக்களை அலுவலா்கள் கிடப்பில் போட்டு அலட்சியப்படுத்தி வருகின்றனா். குறிப்பாக திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூா் ஆகிய 3 மின் பகிா்மான கோட்டங்களில் மாதந்தோறும் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களை, கோட்ட செயற்பொறியாளா்கள் தங்களுடைய எல்லைக்கு உள்பட்டது இல்லை எனக் கூறி நிராகரித்து வருகின்றனா். அதிலும் கடந்த பல மாதங்களாக தொமுச., சாா்பில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். 

    ×