search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விநியோகம் நிறுத்தம்"

    • பவானியில் 141 குடும்பத்தினர், கொடுமுடியில் 104 குடும்பத்தினர், கருங்கல்பாளையம் காவேரி பகுதியில் 17 குடும்பங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடந்த 16-ந் தேதி 1.15 லட்சம் கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது. கடந்த 17-ந் தேதி 2 லட்சம் கன அடி நீராக வெளியேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பவானியில் 141 மேற்பட்ட வீடுகள், கொடுமுடியில் 104 வீடுகள், ஈரோடு கருங்கல் பாளையம் காவிரிக்கரை பகுதியில் உள்ள 17-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது.

    இந்நிலையில் நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைய தொடங்கி யதால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் 1.75 லட்சம் கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    எனினும் தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானி பகுதியில் 141 குடும்பத்தினர், கொடுமுடியில் 104 குடும்பத்தினர், கருங்கல்பாளையம் காவேரி பகுதியில் 17 குடும்பங்களை சேர்ந்த 800 -க்கும் மேற்பட்ட மக்கள் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மதியம் இந்த மக்கள் முகாமுக்கு தங்க சென்றனர். இன்றுடன் 4 -வது நாளாக முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று 4 -வது நாளாக மேட்டூர் அணையிலிருந்து ௬௫ ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பவானியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதால் பவானி கூடுதுறை தனி தீவாக மாறி உள்ளது. கூடுதுறையில் பரிகாரங்கள் செய்ய தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    ×