search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் ஓயர் திருட்டு"

    வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும், திருடுபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டை, வி. புதுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயப் பகுதியாகும். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சமீப காலமாக இங்குள்ள வயல் வெளிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் அமர்ந்து குடிப்பதும், கஞ்சா அடிப்பதும் தொடர் நிகழ்வாக உள்ளது.தாங்கள் பயன்படுத்திய பொரு ட்களை அப்புற ப்படுத்துவது கூட கிடையாது. ஒரு சிலர் மது பாட்டீல்களை நடைபாதையிலேயே உடை த்துவிட்டு செல்கின்றனர். மேலும், அந்த மர்மநபர்கள் வயல்வெளிகளில் உள்ள பல்வேறு பொருட்களை திருடிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மறுநாள் காலையில் வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தில் செந்தில், ராஜசேகர் ஆகியோர் அவரவர் வயல்வெளிக்கு இன்று காலை சென்றனர். நெற்பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் கொட்டகைக்கு சென்று, ஸ்டார்ட்டரை இயக்கினர். ஸ்டார்ட்டர் மட்டும் இயங்கியது. மோட்டார் ஓடவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மோட்டாரை நிறுத்திவிட்டு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது மோட்டார் கொட்டகை அருகில் ஒரு சிலர் அமர்ந்து மது அறுந்தியதும், அவர்கள் மோட்டார் கொட்டகையில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் வயரினை அறுத்து சென்றதும் தெரியவந்தது. மது அருந்திய மர்மநபர்கள் கஞ்சா புகைத்ததற்காக அறிகுறிகளும் இருந்தன.ஸ்டார்ட்டரில் இருந்து போர்வெல்லுக்கு செல்லும் மின் ஓயரில் ஓட்டுக்கள் இருக்ககூடாது. அவ்வாறு இருந்தால் மோட்டார் பழுதாகி விடும். இதனால் விலைஉயர்ந்த ஓயர்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துவார்கள். மேலும், தற்போது புதிய மின் ஓயரினை மாற்ற வேண்டுமெனில் மோட்டாரை வெளியில் தூக்க வேண்டும். இதற்கு ரூ.6 ஆயிரம் வரை செலவாகும்.

    மேலும், புதிய மின் ஓயர் வாங்க ரூ.10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை செலவாகும். பின்னர் எலக்ட்ரிசீயன் சம்பளம் என மொத்தத்தில் ரூ.25 ஆயிரம் வரை பண விரயம் ஏற்படுமென விவசாயிகள் வேதனையுடன் கூறினர். இதனை கருத்தில் கொண்டு போலீசார் கிராமப்பகுதிகளிலும், குறிப்பாக வயல்வெளி செல்லும் சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீதும், திருடுபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓட்டை, வி. புதுப்பாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×