search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி மராத்தான்"

    • மினி மராத்தான் போட்டி நடந்தது.
    • வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாம்பட்டி கிராமத்தில் பிரியாவிடை நயனார், பொன்னாவிடை செல்வி தீர்த்தவாரி மண்டகப்படி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    இந்த மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் மாம்பட்டி யில் தொடங்கி ஏரியூர் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வர எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியினை எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளீஸ்வரி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர்.

    ராஜபாளையத்தை சேர்ந்த மாரி பிரசாத் முதல் பரிசையும், ரெங்கராஜ் 2-வது பரிசையும், 3-வது பரிசை பெங்களூரு சுரேசும் பெற்றனர். மினி மராத்தான் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங் களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை, வெற்றி கோப்பை, பாராட்டு சான்றி தழ், பதக்கங்கள் வழங்கி கவுரவப்படுத்தினர். அடுத்து வந்த 10 பேருக்கு ஊக்கத் தொகையாக பரிசு தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற 70 வயது முதியவர் கலந்து கொண்டு எல்கையை அடைந்தார். அதோடு பெரம்பலூரை சேர்ந்த ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் மற்றும் தனது மகள் ஓடியபோது உற்சாகப்படுத்திய தாய் என பலருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    முன்னதாக கிராமத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி களில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ×