search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான்"

    • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
    • 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என போட்டிகள் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

    அன்று காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டப்ப ந்தயத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அவரும் கலந்து கொள்கிறார்.

    போட்டிகள் ஆண்கள், மாணவர்கள், பெண்கள் என தனித்தனியாக நடக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என போட்டிகள் நடக்கிறது.

    வெற்றி பெறுப வர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பரிசுகளை வழங்குகிறார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிர மும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், சிறப்பு பரிசாக 5 பேருக்கு தலா ரூ.1,000 வீதமும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக ரூ.300 செலுத்தி https://pmu.edu/dare2022 என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் அன்புராஜ், துணைவேந்தர் வேலுச்சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

    • போட்டிகளை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி இணைந்து நடத்திய இந்த போட்டியானது ஆலங்குளத்தை அடுத்த பனையங்குறிச்சி கிராமத்தில் தொடங்கி கபாலிபாறை கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,

    முக்கூடல் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது.

    இதனை அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

    முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி போஸ், ஸ்டஅக் பள்ளி தாளாளர் புனிதா செல்வி, ஐன்ஸ்டீன் கல்லூரி தலைவர் மதிவாணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர், பள்ளித் தலைவர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×