search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழத்துறையாறில்"

    • வடசேரி காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
    • மாம்பழத்துறையாறு பகுதியிலும் மழை பெய்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மாலை 5.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை வெளுத்து வாங்கியது. புத்தேரி, வடசேரி, பார்வதிபுரம் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வடசேரி காசிவிஸ்வநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

    மேலும் வடசேரி பகுதி களில் உள்ள தெருக்களில் தண்ணீர் சாலைகளில் கரை புரண்டு ஆறாக ஓடியது. மின்னல்கள் கண்ணை பறிக்கும் வகையிலும், இடிச் சத்தம் காதை பிளக்கும் வகையிலும் இருந்தது. மாம்பழத்துறையாறு பகுதியிலும் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 72 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல், இரணியல், சுருளோடு, குருந்தன் கோடு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப் பகுதியிலும் மழை நீடித்ததை யடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களின் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.56 அடியாக இருந்தது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.35 அடியாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.18 அடியாக உள்ளது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 22.4, பூதப்பாண்டி 65.4, களியல் 16, கன்னிமார் 11.4, நாகர்கோ வில் 10.2, சுருளோடு 58.4, தக்கலை 24, குளச்சல் 28.6, இரணியல் 59.4, பாலமோர் 27.2, மாம்பழத்துறையாறு 72, திற்பரப்பு 17.2, ஆரல்வாய்மொழி 2, கோழிப் போர்விளை 8.2, அடையாமடை 26, குருந்தன்கோடு 70, முள்ளங்கினாவிளை 4.8, ஆணைக்கிடங்கு 70.4, முக்கடல் 15.2.

    ×