search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சியை"

    • சேலம் மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாநகர மக்களுக்கு சீராக கூடிநீர் விநியோகம் செய்திட தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் அமல்படுத்த சேலம் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாநகரச் செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, உதயகுமார், பொன்ரமணி உள்பட பலர் கண்டன உரையாற்றினர். அவர்கள் பேசும்போது, சேலம் மாநகர மக்களுக்கு சீராக கூடிநீர் விநியோகம் செய்திட தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் அமல்படுத்த சேலம் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதனால் குடிநீர் கட்டணத் வைப்புத் தொகை உயரும். எனவே மாநகராட்சி நிர்வாகமே குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்றனர்.

    இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆசை தம்பி நன்றி கூறினார்.

    ×